துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

கடந்த ஆண்டு வெளியான ஆதித்யவர்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம் மகன் துருவ் விக்ரம்.

அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தந்தை விக்ரமுடன் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் துருவ்விக்ரம் நடிக்கவிருக்கும் மூன்றாவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை ’பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ் அடுத்ததாக இத்திரைப்படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

Mari Selvaraj

Dhruv Vikram Next with Mari Selvaraj