சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் – முழு ஆதரவை தெரிவிக்கும் இயக்குனர்

நடிகர் சூர்யா NEET தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர் கருத்து தெரிவித்த பாரதி ராஜா “தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவே புதிதாக சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலுவானவர்கள் எல்லோரும் இணைந்துள்ளோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் எனவும் அவருடைய கருத்துக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Bharathiraja about suriya issue

Bharathiraja about suriya issue