அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி பார்த்திபன் உருக்கமான பதிவு

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு தகவல் வெளிவந்திருந்தது. இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அமிதாப்பின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா ஆகியோர் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், “அமிtop! ரசிகனாய் என் அபிமான நட்சத்திர வரிசையில் உயர்நிலையில் நிற்பவர்! Positive-இன்றல்ல,என்றுமே நினைப்பவர் – உணர்வலைகளை பரப்புபவர். மருத்துவமனையிலிருந்து அவர் பேசப் பேச கண்கள் கசிந்தன மூப்பு என்ற ஒரே பலவீனத்தை தவிர மிக strong மனிதர். மகனின் கைகளை பற்றியபடி நலமோடு திரும்ப பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.

Parthiepan on Amitabh Bachchan