லாக்டவுனில் நாயகன் குண்டானதால், தடைபட்டுள்ள படப்பிடிப்பு

முக்கோண காதல் கதையை கொண்டு தயாராகும் ‘காகிதப்பூக்கள்’ படத்தில் அறிமுக கதாநாயகன் லோகன், இன்னொரு கதாநாயகனாக பிரவீன்குமார், கதாநாயகி பிரியதர்சினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், சுமார் 5 மாதங்களாக தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தும், படத்தின் நாயகன் லோகன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் குண்டாகி விட்டதால் ‘காகிதப்பூக்கள்’ படக்குழுவால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம்.

அதனைத்தொடர்ந்து நாயகன் பத்தே நாளில் உடல் எடையை குறைப்பதாக கூறியதை தொடர்ந்து, படப்பிடிப்பை வரும், 15ம் தேதி துவக்க திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.

kaakitha pookal Mmovie updates