போதைப்பொருள் விவகாரம் – தமிழ் பட முன்னணி நடிகைக்கும் – விசாரணையில் வாரிசு நடிகை தகவல்

செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் , போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சில நடிகைகளின் பெயரை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, என்.சி.பி.யின் விசாரணையில் ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோர் பெயரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தாம், சாரா, ராகுல் மற்றும் சிமோன் ஆகியோர் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் சேர்ந்து போதைப்பொருள் வைத்திருந்ததாக ரியா வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ரியா தற்போது தனது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி, சுஷாந்தின் சமையல்காரர் தீபேஷ் சாவந்த் மற்றும் அவரது வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இவர்கள் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் இருப்பார்கள் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Rakul Preet Singh latest news

Rakul Preet Singh latest news