ஸ்ரேயாவின் படத்துக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்

தமிழில், மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, கந்தசாமி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகு படங்கள் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் கைவசம் விமலின் சண்டக்காரி, அரவிந்த்சாமியின் நரகாசூரன் போன்ற வரிசைகட்டியுள்ளன.

அந்தவைகயில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரேயாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Gamanam

அதில் ஸ்ரேயா நடிக்கும் ‘கமனம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுஜன் ராவ் இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது.

ilaiyaraja

Shriya Saran next movie updates