ஐந்து மொழிகளில் வெளியாகும் விஜய்சேதுபதியின் படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம்.

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஓடிடியில் ஐந்து மொழிகளிலும் வெளியாக இருப்பதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Sethupathi's ka pae ranasingam release in 5 languages

Vijay Sethupathi’s ka pae ranasingam release in 5 languages