திருமணத்தால் விலகிய நாயகி, வாய்ப்பை பெற்ற மேகா ஆகாஷ்

இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த ஸ்வாதினி என்பவர் இயக்கும் முதல் படத்தில் நாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நிஹாரிகா என்ற நடிகை ஒப்பந்தமாகியிருந்தார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடதக்கது

படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இதுவரை நடைபெறவில்லை. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபரில் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் வரும் டிசம்பரில் நிஹாரிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து இத்திரைப்படத்தில் இருந்து விளக்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது அத்திரைப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் இணைந்துள்ளார். இந்த படம் ஒரு போட்டோகிராபருக்கும் நடனக்கலைஞருக்கும் இடையே நடக்கும் காமெடி கலந்த ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்று இயக்குனர் ஸ்வாதினி தெரிவித்துள்ளார்.

Megha Akash

Megha Akash Next Movie Updates