கொரோனா முடக்கத்தை தொடர்ந்து திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், இவ்வருடம் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் சாத்தியம் இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம், 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியிடும் முடிவுக்கு படக்குழுவினர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதே வருடம் தீபாவளிக்கு ‘தளபதி 65’ படத்தை வெளியிட வேண்டும் என்றும் மற்றைய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இத்தகவல் வெளியானதை தொடர்ந்து, ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

MAster and thalapathy 65 updates
Leave a Reply