இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகத்திற்கு தலைப்பு மாற்றம்?

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம் நிறைந்த படமாக சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் 2018ம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவந்தநிலையில் இத்திரைப்படத்துக்கு ‘இரண்டாம் குத்து’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Iruttu Arayil Murattu Kuthu 2 news

Iruttu Arayil Murattu Kuthu 2 news