பாடகர் எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டாலும் நுரையீரல் பிரச்சனை காரணமாக எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது எஸ்பிபி அவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எஸ்பிபியின் சிகிச்சைக்கு தமிழக அரசு எந்த வகையிலும் உதவி செய்ய தயார் என்று கூறியிருந்த நிலையில், தற்போது எஸ்பிபியின் நுரையீரல் மாற்று சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என கூறப்படுகிறது.

S. P. Balasubrahmanyam latest corona updates

S. P. Balasubrahmanyam latest corona updates