சினிமாவுக்கு வந்ததால் ஒன்றை மட்டும் இழந்து விட்டேன் – விஜய் சேதுபதி

தளபதி விஜய்யுடன் விஜய்சேதுபதி நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, ‘மாஸ்டர்’ திரைப்படம் மிக பிரமாண்டமாக வந்துள்ளது என்றும், படத்தின் டிரைலரை தான் பார்த்ததாகவும், மிக சிறப்பாக இருந்ததாகவும், ரசிகர்களையும் மக்களையும் இந்த படம் கவரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவுக்கு வந்ததால் பெயர், புகழ் , பணம் உள்பட பலவற்றை நான் பெற்றிருந்தாலும் தன்னுடைய அப்பாவித்தனத்தை சினிமாவுக்கு வந்தபின்னர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஓரளவுக்கு நேர்மையாகவும் நல்லவனாகவும் இருந்தேன் என்றும் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi About His Life

Vijay Sethupathi About His Life