சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை ஓ.டி.டி. நிறுவனம் எவ்வளவு தொகைக்கு வாங்கியது குறித்த தகவல் வெளியானது

சினி செய்திகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகிவருகின்றன.

அந்தவரிசையில் தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வருகிற அக்டோபர் 30-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது .

ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை அதே தொகைக்கு ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கு விலைபோனதாக சொல்லப்படுவதால், மொத்தம் ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Soorarai Pottru

Soorarai Pottru Updates