விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? – சந்தேகமடைந்த பாடலாசிரியர்

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’. ரூபாய் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

மெகாஹிட் திரைப்படமான விஸ்வாசம் தற்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் நேற்று மாலை சன் தொலைக்காட்சியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஒளிபரப்பானது. அதனைத்தொடர்ந்து ‘விஸ்வாசம்’ என்ற ஹேஷ்டேக் நேற்று மாலை தொடங்கி இப்பொழுதும் டிரெண்டில் உள்ளது.

தொலைக்காட்சியில் மூன்றாவது முறையாக ஒளிபரப்பப்பட்டபோதிலும் ‘விஸ்வாசம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பாடலாசிரியர் அருண்பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் “#விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது. ஒவ்வொரு முறை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போதும் நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்து பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

பாடலாசிரியர் அருண் பாரதி ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டங்கா டங்கா டங்கா’ என்ற பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Again Viswasam On Trending