அமிதாப், அபிஷேக்பச்சனை அடுத்து ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு தகவல் வெளிவந்திருந்தது. இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அமிதாப்பின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amitabh Bachchan's Family Affected By Corona

Amitabh Bachchan’s Family Affected By Corona