படமாகும் கேரள விமான விபத்து சம்பவம்

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி இரவு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம், விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இது மிக பெரும் சோகத்தை ஏட்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த விபத்தை மையமாக வைத்து மலையாளத்தில் ‘கேலிகட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகவுள்ளது. இதனை மாயா என்பவர் இயக்குகிறார். கதை, திரைக்கதையை மஞ்சீத் மரன்சேரி எழுதுகிறார்.

Calicut Express Movie Updates

Calicut Express Movie Updates