சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி – பாலிவுட்டில் பரபரப்பு

பிரபல நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானதையடுத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக சல்மான்கான்நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதுமற்றுமின்றி ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

தற்போது லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்த நிலையில், சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து பார்த்துள்ளதாகவும், கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தற்போது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Salman Khan latest updates

Salman Khan latest updates