எஸ்.பி.பி.க்காக சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டி உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்ளது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சிலர் கோயில் முன் உள்ள கொடிமரத்தின் அருகே எஸ்.பி.பி. பாடிய சங்கராபரணம் எனும் சூப்பர் ஹிட் பாடலை வாசித்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தித்தனர். இதன் பின்னர் எஸ்.பி.பி. உடல் நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜை சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்டது.

Video News Link

sabarimala special pooja for SP balasubramanyam