உடல் எடையை குறைக்க உள்ள விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளமை குறித்த தகவல்களை ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் விபரித்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ள இத்திரைப்படத்தை எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் சேதுபதி “நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்ததில்லை. இதை நான் முத்தையா முரளிதரன் அவர்களிடம் கூட தெரிவித்துள்ளேன், அதற்கு அவர் இந்த படத்தில் நடிக்க சரியான தகுதி இதுதான் என சொன்னார். மேலும் இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க உள்ளதாகவும், ஆனால் அது சற்று கடினமாக இருப்பதாகவும் ” மேலும் தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi In muttiah muralitharan biopic

Vijay Sethupathi In muttiah muralitharan biopic