டிக்கிலோனா படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற சோனி மியூசிக்

சந்தானம், ஹர்பஜன் சிங் கூட்டணியில்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது டிக்கிலோனா திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்க, யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி, இசை யுவன் சங்கர் ராஜா.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது.

Dikkiloona moive audio rights

Dikkiloona moive audio rights