அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு தகவல் வெளிவந்திருந்தது. இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அமிதாப்பின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று தற்போது உறுதியாகியுள்ளது. இதனை அபிஷேக் பச்சன் தனது சமூகவலைத்தளத்தில் உறுதி செய்ததோடு தாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஐஸ்வர்யாராய், ஆராதனா, ஜெயாபச்சன் ஆகியோர்களுக்கு தோற்று இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

Amitabh Bachchan tests positive for Corona

Amitabh Bachchan tests positive for Corona