தளபதி 65 இல் தளபதி விஜய்க்கு ஜோடியாகும் விஜய்சேதுபதி பட நாயகி

’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது என்று செய்திகள் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்முலம் துப்பாக்கி, கத்தி, மற்றும் சர்கார் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் நான்காவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பதாகவும், தமன் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னொரு நாயகியாக தற்போது நடிகை மடோனா செபஸ்டியன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Madonna Sebastian in thalapthy 65

Madonna Sebastian in thalapathy 65