சரத்குமார் குடும்பத்தில் இன்னொரு வெறித்தனமான விஜய் ரசிகர் – வைரல் வீடியோ

உலகெங்கிலும் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் திரையுலகிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பல முன்னணி நடிகர், நடிகைகள் அவருடைய ரசிகர்கள் தான் என்பதுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறே.

அவ்வாறே சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி ஏற்கனவே தான் விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறியிருந்த நிலையில், தற்போது சரத்குமார் குடும்பத்தில் மேலும் ஒரு விஜய் ரசிகர் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சரத்குமாரின் மகன் ராகுல், விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ’வெறித்தனம்’ என்ற பாடலுக்கு நடனமாடி தானும் ஒரு விஜய் ரசிகர் என்பதை நிரூபித்து உள்ளதாக கூறபடுகிறது.

Another thalapathy vijay fan from Sarathkumar family