சூர்யாவின் பிறந்த நாளன்று சூரரைப்போற்று படம் குறித்த ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு – ஜிவி பிரகாஷ்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இம்மாதம் 23 ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து, திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சூர்யாவின் காமடி டிபி போஸ்டர்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு இசை அமைத்த ஜிவி பிரகாஷ், தனது சமூக வலைத்தளத்தில் ’சூர்யாவின் பிறந்த நாளன்று சூரரைப்போற்று படம் குறித்த ஒரு ஸ்பெஷல் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவர், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு” வெளிவரும் என பதிவிட்டுள்ளார். அப்டேட் மிக விரைவில் வெளி வரும் என்பதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Soorarai Pottru Updates Soon – G. V. Prakash Kumar