விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஆவல்

கடந்த 2014 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்த திரைப்படம் ’தர்மதுரை’. திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார்.படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா.

மிகப்பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் வெளியாகி தற்போது நான்கு வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் ’தர்மதுரை 2’ பிளான் பண்ணலாமா?, நான் தயார் ” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆர்கே சுரேஷின் கோரிக்கையை ஏற்று விரைவில் ’தர்மதுரை 2’ படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குவாரா? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

plan to Dharma Durai part 2