நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம், பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நடிக்க மாட்டேன் – ராஷி கண்ணா

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார் நடிகை ராஷி கண்ணா. மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஷி கண்ணா அளித்த செவ்வி ஒன்றில் “படத்தின் கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நிச்சயமாக நடிக்க மாட்டேன். அதே நேரம் கதை பிடித்து இருந்தால் தயாரிப்பாளர் எவ்வளவு குறைவாக சம்பளம் தருவதாக சொன்னாலும் ஒப்புக்கொண்டு நடித்து விடுவேன்.

நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை. நான் பணத்துக்கு இரண்டாவது இடம்தான் கொடுப்பேன். வெற்றி தோல்வி என்பது நமது கையில் இல்லை. ஆனாலும் கதை தேர்வு செய்வதை மட்டும் நம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.

Rashi Khanna

Rashi Khanna News Updates