நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங்,34 கடந்த ஜூனில் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதில்அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசில் சுஷாந்தின் தந்தை புகார் அளித்தார்.

இந்நிலையில் தன் மீதான பீஹார் போலீசார் பதிந்துள்ள வழக்கை, மும்பை போலீசாரிடம் மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க மும்பை போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளது.

Sushant Singh Rajput case move to cbi