வருங்கால கணவருக்கு நிவேதா தாமஸ் போடும் நிபந்தனைகள்

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நிவேதா தாமஸ், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் ஹசன் மற்றும், தளபதி விஜய் படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

தற்போது 24 வயதாகும் நிவேதா தாமஸ், முதன் முறையாக தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “எனது வாழ்வில் தற்போது சினிமா தான் மிக முக்கியம், எனக்கு திருமண ஆசை வரும் போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.

எனது வருங்கால கணவர் அதிகமாக பயணம் செய்பவராக இருக்க வேண்டும், முகத்திற்கு நேர் பேச வேண்டும், பின்னால் பேசுபவராக இருக்கக் கூடாது, கணவர் என்ற பொறுப்பை உணர்ந்து என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என நிபந்தனைகள் போட்டுள்ளார்.

Nivetha Thomas

Nivetha Thomas Wedding updates