பரிகார பூஜைக்காக காத்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பரிகார பூஜை ஒன்றின் பின்பே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டாலும் இதுவரை நடந்தபாடில்லை.

இந்நிலையில் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடியவதற்குள் அடுத்த 2021ம் ஆண்டும் முடிந்துவிடும் என்ற நிலை காணப்படுகிறது.

இதனால் இவர்கள் திருமணம் எப்போது என ஜோதிடரை குடும்பத்தினர் அணுகிக் கேட்ட போது ஒருமுறை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து வந்தால் திருமணம் நிச்சயம் என்று கூறி உள்ளனர்.

ஆனால் இப்போதோ கொரோனா ஊரடங்கில் கோயில் தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஊரடங்கு முடிந்தபின் அவர்கள் தரிசனம் செய்யக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்பிறகே திருமண அறிவிப்பு வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Nayanthara andVignesh Sivan wedding updates

Nayanthara andVignesh Sivan wedding updates