அண்ணாத்தே படத்தின் பிரதான வில்லனாக களமிறங்கும் இந்தியாவின் பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்தே’.

கொரோனா கட்டுப்பாடுகளினால் தடைபட்டுள்ள படப்பிடிப்புகள் விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடித்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் பிரதான வில்லனாக ஜாக்கிஷராஃப் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Another villain in Annaathe movie

Another villain in Annaathe movie