திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், இதுகுறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனன்ர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, “சட்டத்தின் படி, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட பெயர்களில் ஒருவர் அல்லது அனைனைவரின் பெயரையும் அழிக்கக்கூடும்” என தெரிவித்திருந்தார்.

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு சமூகவலைத்தளவாசி ஒருவர் “இதுவே உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், இப்படித்தான் சட்டம் பேசுவீங்களா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி, “நெருக்கமானவர் என்ன. அது எனக்கே நடந்திருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால். அது அப்படியே தான் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக கஸ்தூரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Another metoo from actress kasthuri

Another metoo from actress kasthuri