மீண்டும் விரைவில் கட்சி தாவப்போகும் நடிகை குஷ்பு

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், மீண்டும் விரைவில் நடிகை குஷ் கட்சி தாவப்போவதாக பல்வேறு தரப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.

குஷ்புவின் சமீபத்திய செயட்படுகைளை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் குஷ்புவுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் கண்டனம் தெரிவிது வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் முதலில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பாராட்டி டுவிட் செய்த நடிகை குஷ்பு, தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தார்

இந்த நிலையில் இன்று மீண்டும் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற நிலையில் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ராமர் கோவிலுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்

இவ்வாறு தொடர்ச்சியாக நடிகை குஷ்பு பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், அவர் பாஜகவில் விரைவில் இணைவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Again Kushboo ready to jump to another party