நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்

நடிகர் சூர்யா NEET தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி A.B.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தில் “கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது” என்ற சூர்யாவின் வரிகளை தனது கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டி சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

actor surya statement issue

actor surya statement issue