பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வண்மையாக கண்டிக்கிறேன் – நடிகர் சௌந்தரராஜா

சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர்கள், முக்கிய பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சௌந்தரராஜா தெரிவித்துள்ள கண்டன குறிப்பில்
“பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாக பேசுவதால் துவேஷம் பெறுமேயன்றி வேறு எதுவும் நிகழாது. ஓம் சரவணபவ” என்று தெரிவித்துள்ளார்.

Actor Soundara Raja Also Support For God Murugan