வெற்றிமாறன் திரைப்படத்தில் புதிய தோற்றத்தில் சூரி

சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான நடிகர் சூரி, தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நகைசுவை நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் சூரியின் தோற்றம் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சற்று நரைத்த தாடியுடன் தோன்றும் இப்புகைப்படம் ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றுவருகிறது.

நடிகர் சூரி அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்தே திரைப்படத்திலும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Actor Soori New Look For Vetrimaaran's Movie

Actor Soori New Look For Vetrimaaran’s Movie