மத வன்முறையை தூண்டும் போக்கிரிகள் தண்டிக்கப்படவேண்டும் – நடிகர் பிரசன்னா கொந்தளிப்பு

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் வீடியோவை சமூக வலைதளங்களில் காரசாரமான விமர்சனங்கள் பலராலும் முன்வைக்கப்பட்டுவருகிறது.

மேலும் இது குறித்து முருக பக்தர்கள் உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா
“எவரும்‌ எவருடைய நம்பிக்கையையும்‌ ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய்‌ பேசப்படும்‌ மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன்‌ கேட்பதில்லை இவரையேன்‌ கேட்பதில்லை என்கிற வாதமும்‌ பயன்‌ தராது. அவரவர்‌ நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. அதை மதிக்கத்தெரியாத போக்கிரிகள்‌ யாராயினும்‌ எவர்க்கெதிராயினும்‌ தண்டிக்கப்பட்டால்‌ மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்‌! நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில்‌ மதநம்பிக்கையினும்‌ அதிமுக்கியம்’‌ என்று தெரிவித்துள்ளார்.

Actor Prasanna On kantha sasti kavasam