பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இயக்குனர் பாரதிராஜா புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், பத்திரப்பதிவுத் துறைக்கு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், பாரதிராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களை, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் “பாரதிராஜாவும், ஒரு சிலரும் சேர்ந்து, புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தயாரிப்பாளர் சங்கத்தை, சிறப்பு அதிகாரி வழிநடத்தி வருகிறார். சங்கத்திற்கு தேர்தல் நடத்த, நீதிமன்றம் உத்தரவின்படி, தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கொரோனாவால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பாரதிராஜாவின் நடவடிக்கை, சிறப்பு அதிகாரி, சரியாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா உள்ளிட்டோர், சங்கத்திற்கு விரோதமாக புதிய சங்கத்தை உருவாகியுள்ளனர். இது சங்க விதிமீறலாகும். இதனால் பாரதிராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiraja

Bharathiraja