கமல் தோல்வி குறித்து இன்னொரு திரைபிரபலம் போட்ட டுவிட்

Kamal Haasan, Makkal Needhi Maiam, : நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கிய போது ஆரம்பத்தில் சில மணி நேரம் கமல்ஹாசன் முன்னிலையில் இருந்தார்.

அதனால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இறுதியில் அவர் தோல்வி அடைந்தார். சுமார் 1700 வாக்கு வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் தோல்வியை திரையுலகின் தோல்வி என பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது பாணியில் கமல் தோல்வி குறித்து பதிவு செய்த டுவிட் வைரலாகி வருகிறது.

“திரு கமல் அவர்களின் வெற்றி என்பது…. வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்)
வாங்காமல், வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே.”