ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ!

ar murugadoss, cine news in tamil : தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், இம்முறை அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கவுள்ளாராம். இப்படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு சுரேஷ் தயாரிக்க உள்ளார்.

தமிழில் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக ஏ.ஆர் முருகதாஸ் அப்படத்தில் இருந்து விலகியதால், தற்போது நெல்சன் ‘தளபதி 65’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

allu arjun