இணையத்தில் வைரலாகும் தாமிராவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

Director Thamira : இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் நடித்த ’ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்கிய இயக்குனர் தாமிரா இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தாமிராவின் கடைசி பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. அதில்

“இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை.
யாவரும் கேளிர்.”

என பதிவிட்டுள்ளார்.இயக்குனர் தாமிராவின் இந்த கடைசி பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Director Thamira