பிரபல கிரிக்கெட் வீரர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 கோடி கொரோனா நிவாரணம் கொடுத்த அக்‌ஷய்குமார்

Akshay Kumar, cine news in tamil : இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய்குமார், தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த இருக்கிறார்.

சமீபத்தில் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டார். மேலும் ஆரம்பம் முதலே அக்‌ஷய்குமார் கொரோனா நிவாரண உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகிறார்.

அந்தவகையில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஆரம்பித்ததும் பிரதமர் நரேந்திரமோடி விடுத்த வேண்டுகோள் தொடர்ந்து அக்‌ஷய்குமார் ரூ.25 கோடி நன்கொடை வழங்கினார். திரைப்பட தொழிலாளர்களுக்கும் உதவிகள் வழங்கினார்.

இந்நிலையில் , தற்போது கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ள நிலையில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார்.

அதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கவுதம் கம்பீர்
“தேவைப்படுபவர்களுக்கு உனவு, மருத்துவ உதவி, ஆக்‌சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்‌ஷய்குமாருக்கு நன்றி ” என்று டுவிட்டரில் தெரிவிக்க,

“என்னால் உதவ முடிந்ததற்கு நன்றி. இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதில் அளித்துள்ளார் அக்‌ஷய்குமார்.

Akshay Kumar