திமுக ‘இளைஞரணி’ செயலாளருக்கு இவ்வளவு பெரிய மகனா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Udhayanidhi Stalin, cine news in tamil : திமுக இளைஞரணி செயலளாரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று வியந்து வருகின்றனர்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரனும் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக சென்னை சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏ பதவிக்கும் போட்டியிட்டார். மேலும் “கண்ணை நம்பாதே”, “ஏஞ்சல்”, ரீமேக் படமான “ஆர்ட்டிகள் 15” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர். தற்போது தனது மகன் இன்பநிதியுடன் ஒரு நண்பனை போல் தோள் மேல் கைப்போட்டு உதயநிதி எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத்தான் அவர் வெளியிட்டுள்ளார். மகன் இவ்வளவு வளர்ந்தும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திமுக ‘இளைஞரணி’ செயலாளராக இருந்து வருவது குறித்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Udhayanidhi Stalin