‘விக்ரம்’ படத்தில் கமலின் கதாபாத்திரம் இது தான்?

Cine News In Tamil, Vikram, kamal : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த கமல், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் விக்ரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திரைபடக்குழு தீர்மானித்துள்ளதாக மேலும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Vikram, kamal,