பா.ரஞ்சித்துடன் இணையும் துருவ் விக்ரம் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படத்தின் சூடான தகவல்

மெட்ராஸ், கபாலி, காலா, போன்ற வெற்றி படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது ஆரிய நடித்துவரும் ‘சல்பேட்டா’ என்ற படத்தை இயக்கி முடித்ததை அடுத்து படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இப்படம் வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தனது நீலம் புரோடக்சன் நிறுவனத்தின் ஊடக சில படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இவர் ‘பரியேறும் பெருமாள்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கியவர் என்பதும் தற்போது தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.