ஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் பிரபல நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டை இளைஞர்கள் பலர் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இந்த விளையாட்டிற்கு தூதர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை பாலி வடக்கன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதுகுறித்து கேரள அரசு உடன் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

அதுமட்டுமின்றி இந்த விளையாட்டின் தூதர்களாக இருக்கும் நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
Leave a Reply