Games & Multimedia

SCIENCE & TECHNOLOGY

Powered by Blogger.

Follow us on FaceBook


தமிழ் சினிமா என்றாலே காதல், மோதல், சண்டை என பார்த்து வந்த ரசிகர்களுக்கு சமீப காலமாக தான் கொஞ்சம் இடைவெளி கிடைத்துள்ளது. பல புதிய இயக்குனர்கள் தங்கள் திறமைகளை புதிய கதைக்களத்தில் எடுத்து அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அறிமுக இயக்குனர் சிவா மோகா இயக்கத்தில் மங்காத்தா, மேகா படங்களில் நடித்த அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம் ஜீரோ. இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்துள்ளது.
இந்த டீசரை பார்க்கையில், மெல்லிய காதலுடன் ஆரம்பிக்க, வழக்கமான கதைக்களம் என்று நினைக்கும் தருணத்தில், நம்மை அச்சத்தில் உறைய வைக்கும் பல காட்சிகளை காட்டி மிரட்டி விடுகின்றனர்.
இதில் இயற்கைக்கு மாறாக ஒருவருக்கு கிடைக்கும் சக்தி எந்த அளவிற்கு பாதிப்பையும், பயத்தையும் உண்டாக்குகிறது என்பதை தான் காட்டியிருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜீரோ என்றால் அதற்கு மதிப்பு இல்லை என்று நாம் ஒதுக்கி விட முடியாது, அதற்கும் ஒரு ஆழமான மதிப்பு உள்ளது என்பதை இந்த ஜீரோ தெளிவுப்படுத்தும் என்பது போல் தெரிகிறது.
டீசரை பார்க்கும் போதே நம்மை பயத்தில் ஆழ்த்தி விடுகிறார் இயக்குனர், அது மட்டுமின்றி கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்து விடுகிறார். விரைவில் உங்களை மிரட்ட வருகிறது ஜீரோ.
இப்படத்தை பாலாஜி கபா தயாரித்துள்ளார். அஸ்வினுக்கு ஜோடியாக சிவதா நடித்துள்ளார். டீசரில் நம்மை மிகவும் கவர்ந்தது இசை தான், இப்பணியை நிவாஸ்.கே.பிரசன்னா சிறப்பாக செய்துள்ளார்.


’நீ இதை செய் என்று அஜித் முன்பே கூறினார்’- மனம் திறந்த அருண் விஜய் - Cineulagam


என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டையும் அருண் விஜய் பெற்று விட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் வளர்ச்சியில் அஜித் மிகவும் முக்கியமானவர் என்று கூறியுள்ளார்.
இதில் ‘ முதலில் என்னை அறிந்தால் வாய்ப்பு கொடுத்த கௌதம் மேனன் அவர்களுக்கும், இதில் நடித்த இத்தனை இடம் கொடுத்த அஜித்திற்கும் நன்றி.
நான் மலை மலை படம் நடித்த சமயத்திலேயே அஜித் நீ வில்லனாக நடி கண்டிப்பாக உனக்கு பெரிய இடம் கிடைக்கும் என்று கூறினார், அவரின் வாக்கு இன்று நடந்து விட்டது’ என்று கூறியுள்ளார்

கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தின் இசையை அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். படத்தை பிப்ரவரி மாதம் திரைக்குக் கொண்டுவருகிறார்கள்.
கமலுடன் ஆன்ட்ரியா, பார்வதி, பூஜா நடித்துள்ள ‘உத்தம வில்லன்' பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. ஜெயராம், இயக்குநர் பாலச்சந்தர் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். அமெரிக்காவில் இவ்விழாவை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகின்றன.
அமெரிக்காவில் உத்தம வில்லன் இசை வெளியீடு?
இதற்காக நடிகர், நடிகைகள் பலரை அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், "உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டு விழாவை எங்கே எப்போது நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

- Copyright © tamilcinemanews - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -